.
  • அம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி - -எஸ்.வி. ராஜதுரை
    தமிழில் அம்பேத்கர்என்பது குறித்துப்  பேசுகையில்அண்ணல் அம்பேத்கரையும்அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான "ரிவோல்ட்', "குடி அரசுஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள்எனக்குத் தெரிந்தவரை, 1929 இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் 1919 இல் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த நிகழ்வுதான் – அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால்அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம்.
    அம்பேத்கர்
    ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம்ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடுஎன்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின்
    பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்துபெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோஇருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929).
    பின்னர் புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பார் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் வெளிவந்தது. ("ரிவோல்ட்', 10.11.1929). அம்பேத்கரின் அரசியல்சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற சொற் போர்கள்தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணா நோன்பைக் கண்டனம் செய்த கட்டுரைகள்அம்பேத்கர் – ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி. ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள்காந்தியின் "ஹரிஜன் சேவக் சங்'கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.
    பெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்த கொண்டிருந்த 1936 – 1937 ஆம் ஆண்டுகளில்தான்லாகூரிலிருந்த ஜாத் – பட் – தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும், "தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைஎனச் சொல்லப்படுவதுமான 'அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞுஎன்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு "குடி அரசுஇதழில் "ஜாதியை ஒழிக்க வழிஎன்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அது பின்னர் நூல் வடிவிலும் கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. அதன் பின்னர்அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது. இது குறித்து ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பின் பெரியார் பாட்னாவில் "பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில்கலந்து கொண்டபோது "குடி அரசுஎழுதிய தலையங்கம்சில சுவையான தகவல்களைக் கூறுகிறது :
    “1920களின் இறுதியில் மேற்சொன்ன "ஜாத் – பட் – தோடக் மண்டலின்துணைத் தலைவர்களிலொருவராக பெரியார் தேர்ந்
    தெடுக்கப்பட்டிருக்கிறார்பெரியார் இந்து மத விரோதிநாத்திகர்முஸ்லிம் ஆதரவாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அந்த சங்கத்தாரிடம் புகார் சொன்னதன் பேரில்பெரியார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1936 இல் அந்த அமைப்பின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் அம்பேத்கர். அப்போது அவர் மீதும் பல புகார்களைக் கூறினர் பார்ப்பனர்கள். அம்பேத்கர் தனது உரையில் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததால்அந்த மாநாட்டையே அச்சங்கத்தார் கூட்டவில்லை. "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில்அதைத் தமிழில் மொழிபெயர்த்து "ஜாதியை ஒழிக்கும் வழிஎன்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0 – 4 – 0 வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது,சுயராஜ்ஜியமும் வராதுபொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்'' ("குடி அரசுதலையங்கம், 13.1.1945).
    மேற்சொன்ன உரையிலிருந்த சில கருத்துக்களை காந்தி விமர்சித்ததையும்காந்திக்கு அம்பேத்கர் கூறிய பதில்களையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும்அந்த பதில்களிலும் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' போன்ற நூல்களிலும் அம்பேத்கர் காந்தியின் வர்ண தர்மப் பார்ப்பனியத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்த போதிலும்இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் படிக்க வேண்டும் என்று காந்தியாலேயே பரிந்துரைக்கப்பட்ட மகத்தான ஆக்கம் "சாதி ஒழிப்புநூல்தான்.
    இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும்பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மாற்றிக் கொள்ள காங்கிரசார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, 1940 இல் பம்பாயில் அம்பேத்கர்ஜின்னாபெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரசாரின் சூழ்ச்சிகளையும் விமர்சித்துஅவர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் "குடி அரசு'இதழில் காணப்படுகிறது ("குடி அரசு', 28.1.1940). ஆனால்அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும்அந்த சந்திப்பு குறித்து "தி பாம்பே குரோனிக்கிள்என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்திமகராட்டிரா அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட sorce material on dr.babasaheb ambedkar and the movement of untouchables என்ற நூலில் காணப்படுகிறது (பக்கம் 210). 1940 சனவரி 8அன்று மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்தச் செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின்208 – 210 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.
    வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர்,அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, "திராவிட நாட்டில்', மகாராட்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் "குடி அரசுதலையங்கம் ஒன்று குறிப்பிடுகிறது "குடி அரசு', (30.4.1944) அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோமராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை.
    சுயமரியாதை ஏடுகள்எப்போதுமே காங்கிரஸ் இந்து – தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும்அம்பேத்கரை உயர்த்தியும் எழுதி வந்தன. ஓர் எடுத்துக்காட்டு :
    தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளலாகதென்றும்இவ்வளவு வேற்றுமைகளை இந்நாட்டிலேயுண்டு பண்ணிஇந்நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிய வேதங்கள்இதிகாசங்கள்புராணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி வருகிறார். ஆனால்தென்னாட்டில் நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில தோழர்கள் – முனிசாமி பிள்ளைசிவசண்முகம் போன்றவர்கள் “டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றி சமீபத்தில் சென்னையில் செய்த பிரச்சாரங்களை "ஹரிஜனங்கள் (தாழ்த்தப்பட்டோர்)கவனிக்கக்கூடாதுஇந்து மதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தர்மங்களை அனுசரித்து நடக்க வேண்டும்'' என்றும் "அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லைஎன்றும் கூறிவருகிறார்கள். இவர்கள்நிலைமையையும் அதன் வரலாறுகளையும் உணர்ந்து சொல்லும் வார்த்தைகளா இவை என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்... தங்களுக்கு ஒரு சிலருடைய வாழ்த்தும் புகழும் அப்போதைக்குக் கிடைத்தால் போதும் என்று எண்ணி இவ்வாறு இவர்கள் பேசி வருவார்களேயானால்இவர்களைக் குறித்து எதிர்கால சரித்திரக்காரர்கள் கண்டிக்கவோஎதிர்கால மக்கள் சிரிக்கவோ மாட்டார்களா?'' ("குடி அரசு', 6.1.1945)
    பெரியார்
    1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும்விசயங்கள் தொடர்பானவை 1. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது. 2. 1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது. 3. காஷ்மீர் விவகாரம் 4. சோசலிச சீனாவை அய்.நா. அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது. 4. இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள். இந்த விஷயங்கள் குறித்து "விடுதலை'யில் சா. குருசாமி எழுதிய விமர்சனங்களில் சில கடுமையான வார்த்தைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால்அவற்றை மட்டும் கொண்டு சா. குருசாமி அம்பேத்கர் மீது வைத்திருந்த மதிப்பை தீர்மானித்துவிட முடியாது. அதுவும் தமிழகக் கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை புரிகின்ற இடைநிலைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக விளங்கும் அரசியல் கட்சிகளின்ஆளும் வர்க்கங்களை அண்டி நிற்கும் இயக்கங்களையும் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் அவர்களின் அனுதாபிகளாக இருக்கிறவர்களும் – "அம்பேத்கர் யார்என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சா. குருசாமி கட்டுரைகளைப் படித்தாக வேண்டும். அம்பேத்கருடன் கருத்து வேறுபாடுகள் இருந்த நாட்களிலும் கூடஅவர் மீது பெரியார் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக1947 சூலையில் மாயவரத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரையைக் கூறலாம் :

    தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள்கடையர்கள்,இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். ஏன்என்னைப் போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வியாதிக்கு மருந்து சொன்னார். என்னவென்றால், “பஞ்சமர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் (சமுதாய சமதர்மம்) மதத்தை சார வேண்டும்'' என்று பகிரங்கமாகச் சொன்னேன். அவர் 1930 இல் சொன்னார். அதனாலேயே நாங்கள் அதிக சிநேகிதர்களானோம். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தேன். அவ்வளவு மாத்திரமல்லாமல் அவர் ராமாயணத்தைக் கொளுத்தியவர். “கீதையைக் கொளுத்த வேண்டும். அது முட்டாள்களின் பிதற்றல்'' என்று கூடஅதுவும் சென்னை மாகாணத்துக்கு வந்து சொல்லிவிட்டுப் போனவர். “இந்து மதத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. இனியும் இருக்காது. இந்து மதத்தை விட்டொழித்தாலொழிய இழிவு நீங்காது'' என்று கர்ஜித்தவர். பட்டாங்கமாகப் பிரகடனம் செய்தவர். பல புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறவருமாவார். ஆதலால்அந்தக் கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்லுகிறேன். அவர் அதை மாற்றிக் கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதை சிறிதும்
    மாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு அந்தக் கருத்து நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது ("விடுதலை' 10.7.1947).
    அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்றுஅவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது கூடஅவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன்இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்த வந்தன. எடுத்துக்காட்டாகபிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை "இந்திய சுதந்திர'த்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக்கியதை எதிர்த்துபெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து அரசியல் சட்டத்திற்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, "பிற்படுத்தப்பட்டோர்என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர். 1955இல் பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்களை "விடுதலைஏடு பதிவு செய்துள்ளது.
    அம்பேத்கரின் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?' "இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்போன்ற நூல்களிலுள்ள கருத்துக்கள்பெரியார் இயக்க ஏடுகளில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்து பெரியார் இயக்கம் கொண்டிருந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது :
    இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால்டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானதுஎந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும்பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.
    அம்பெத்கர் உடன் பெரியார்
    உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரைவெகு சாதாரணமாக மதித்ததோடுஅவருடைய பல கருத்துக்களைச் சின்னாபின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய– ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும்அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி,பிற்போக்குவாதி என்றும்அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை "முட்டாள்களின் உளறல்கள்என்றும் சொன்னதோடுகாந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும்ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லிபல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்து மதம் உள்ளவரை தீண்டாமையும் சாதிப் பிரிவும்அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும்சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தியதானது – இந்தியாவுக்கும்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்'' ("விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்)பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1934).
    அம்பேத்கருக்கும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள்ஒத்த கருத்துக்கள்,அம்பேத்கருக்குப் பெரியார் இயக்கம் தந்து வந்த மதிப்புகருத்து வேறுபாடுகள்இவை குறித்த விளக்கங்கள் ஆகியன பெரும் ஆய்வு நூலுக்குரிய விஷயங்களாகும். இங்கு ஓரிரு செய்திகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கர் "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான கல்வி பயின்று கொண்டிருந்தபோதுபேபியன் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களிலொருவரான பொருளாதார அறிஞர் சிட்னி வெப்,அவரது துணைவியார் பீட்ரிஸ் வெப் ஆகியோரும் பேபியன் சோசலிஸ்டுகளே. இவர்களால்தான் அம்பேத்கர் சோசலிசக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டார். பெர்னாட் ஷாவும் இந்த பேபியன் சோசலிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்தான். இந்த மூவரும் சோசலிசம்பெண்ணியம்சோவியத் ரஷ்யா ஆகியன குறித்து எழுதிய கட்டுரைகள்
    பெரியாரின் "குடி அரசுஇதழில் வெளியாகியுள்ளன. அரசு எந்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும் என்பது பேபியன் சோசலிஸ்டுகளின் கருத்து.
    மேற்சொன்ன கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த ஜே.ஏ. ஹாப்ஸன்எல்.டி. ஹாப்வுஸ் ஆகியோரிடமிருந்துதான் ("பிரிட்டிஷ் கருத்து முதல்வாதச் சிந்தனைப் பள்ளிஎனச் சொல்லப்பட்ட சிந்தனைப் போக்கின் முக்கியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்) அரசு என்பதற்கு மிகுந்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதை அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.
    II
    "தமிழில் அம்பேத்கர்என்றுஅம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த தலித் இயக்கச் செயல்வீரர்கள்அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமி பறையர்அன்பு பொன்னோவியம் என்பதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும். அதேபோல "எரிமலைரத்தினம், "எக்ஸ்ரேமாணிக்கம்பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். "புத்தரும் அவர் தம்மமும்நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், "எக்ஸ்ரேமாணிக்கம், "எரிமலைரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருள் செலவில் பெரும் தொகையை ஏற்றுக் கொண்ட ஒய்.எம். முத்துதிருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்திற்குரியவர்கள். தியாகு மொழியாக்கம் செய்த "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' என்ற நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். கடந்த 13 ஆண்டுகளாக "தலித் முரசு'தொடர்ந்து அம்பேத்கர் சிந்தனை குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
    இதற்கிடையேபெரியாரையும் அவரது இயக்கத்தையும் "தலித்தியகண்ணோட்டத்திலிருந்து விமர்சிப்பதாக உரிமை கொண்டாடிய சில நண்பர்கள் கூறிவந்த குற்றச்சாட்டுகளிலொன்றுபெரியாரும் திராவிட இயக்கமும் திட்டமிட்டு முதலில் அயோத்திதாசரையும் பின்னர் அம்பேத்கரையும் இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதாகும். அயோத்திதாசரை குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து தமிழகம் முழுவதற்கும் மட்டுமின்றி,இந்தியா முழுவதற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் – பிறப்பால் தலித்துகளோதலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ அல்லர். அவர்கள் அயோத்தி தாசர் பற்றி எழுதியதற்குப் பிறகே இன்றைய நவீனத்துவபின் நவீனத்துவதலித் அறிவுஜீவிகள் அயோத்திதாசரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்னும் மிக அண்மைய வரலாற்று நிகழ்வுகள்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
    அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், "சாதி ஒழிப்புநூலின் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும் தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்துள்ள தமிழாக்கமும் கூடதமிழ் நாட்டிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோதலித் அரசியல் கட்சியையோ சாராத "தலித் முரசுஏட்டால்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
    மேலும் "புனே ஒப்பந்தம்தொடர்பாகவும் அம்பேத்கரின் பவுத்த மத மாற்றம் தொடர்பாகவும்இட ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்ட,நடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம் கூட "சாதி ஒழிப்புகுறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத "தலித் எழுச்சிதமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால்தமிழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கரின் எழுத்துகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளனஅவர்களால் செய்யத் தவறியவை ஒரு புறமிருக்கட்டும். என்.சி.பி.எச். நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டுஅம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை தலித் இயக்கங்கள் நடத்தியிருக்கின்றன?
    இவை போகட்டும்கேரள நடிகர் மம்முட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பாக நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் "டப்பிங்செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதாஇந்திய மொழிகள் அனைத்திலும் அதனை "டப்பிங்செய்து வெளியிட
    மத்திய அரசாங்கமோமாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என "அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள்,பங்கு பெற்றுள்ளவர்கள் – ராம் விலாஸ் பாஸ்வான்மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டா?ஆகவே அம்பேத்கரை "இருட்டடிப்புசெய்ததாக,
    செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த "தலித்அறிவுஜீவிகளுக்கோஇயக்கங்களுக்கோ இல்லை.
    III
    அம்பேத்கரை ஆழமாகக் கற்க விரும்புகிறவர்களோமேலோட்டமாக மட்டும் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறவர்களோ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உள்ளன. மகாராட்டிர மாநில அரசாங்கத்தால் இதுவரை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை யாவும் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியவையும் பேசியவையும்தான். அந்த ஆங்கில ஆக்கங்களுக்குத் தொகுப்பாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் இருந்தவர்களில் கணிசமானோர் – அம்பேத்கர் இயக்கத்தோடுஅவரது சிந்தனையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஓரிருவர் அம்பேத்கருடன் பழகியவர்கள். இக்காரணங்களால் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவதுஒப்பீட்டு நோக்கில் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. ஆனால்,இதில் சிக்கல் இல்லாமல் இல்லை.
    அம்பேத்கரின் எழுத்துகளுக்கு யார் வாரிசு என்னும் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டியிருந்தது. அம்பேத்கரின் ஆக்கங்கள் பல்வேறு நபர்களின் வசமிருந்தன. அவர்களது இசைவைப் பெற வேண்டியிருந்தது. எனவேஇந்தச் சிக்கல்கள் படிப்படியாகத் தீரத் தீரத்தான் அவருடைய ஆக்கங்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட வேண்டியிருந்தது. எனவே அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி வெளியிடப்படவில்லை. அதாவது அந்த மாபெரும் அறிஞரின்போராளியின் சிந்தனையிலும் பணிகளிலும் ஏற்பட்ட பரிணாமத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த தொகுப்புகள் அமையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும்,அம்பேத்கரின் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுரைகள் தவிரமற்றெல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான லட்சியத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை. ஒவ்வொரு எழுத்தும் பேச்சும்,குறிப்பிட்ட அரசியல்சமூகச் சூழலில் குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவேஎந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட விஷயத்தை எழுதினார்பேசினார் என்பது அவரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் ஆங்கிலத் தொகுப்புகள் அம்பேத்கரின் எழுத்து களை சம்பந்தப்பட்ட வரலாற்றுஅரசியல்சமூகச் சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் வகையில் விரிவான அறிமுகங்களை நமக்குத் தருவதில்லை. இந்தக் குறைபாடுகளை தமிழாக்கத் தொகுதிகளும் தொடர்வது வியப்புகுரியதல்ல.
    அம்பேத்கரைப் படிப்பதற்கு முதல் நிபந்தனைஅவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதாகும். இருபதாம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்களில் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்டிருந்தவர் அவர்தான். மேற்கத்தியப் பண்பாடு வழங்கிய தாராளவாதக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் – வரலாறு,பொருளாதாரம்மானுடவியல்அரசியல்சட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். அத்தகைய கல்விஅவரது சிந்தனையின் பன்முகத் தன்மையைக் கூர்மைப்படுத்தின. ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால எழுத்துப் பணிகளையும் சொற்பொழிவுப் பணிகளையும் மேற்கொண்டிருந்த அவரைப் போல வாழ்க்கையில் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்கள் அரிது.
    ஆராய்ச்சி அறிஞராககல்லூரிப் பேராசிரியராககல்வியாளராகவழக்குரைஞராகபரோடா சமஸ்தான ராணுவத்தின் லெப்டினண்டாகவைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராகசுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராகபிரசுரங்களை வெளியிடுபவராகபத்திரிகையாளராககிளர்ச்சியாளராகபேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவராகஅரசியல் சட்டத்தை வரைபவராகபுத்தரின் சீடராகதாழ்த்தப்பட்டசுரண்டப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராகப் பல்வேறு பரிமாணங்களுடன் வாழ்ந்த அவர் தன் – வரலாறு எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எழுத விரும்பிய இன்னும் பல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் போலவே அந்த தன்வரலாற்றையும் அவரால் எழுத முடியவில்லை. எனினும் அவரது முக்கிய எழுத்து பலவற்றில் அவரது தன் – வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
    அவர் தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது பார்ப்பனிய – சாதிய ஆதிக்கத்தின் அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில்அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து. அதுவும் ஆங்கில எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மேலும் இடத்தாலும் காலத்தாலும் வரம்புக்குட்படுத்தப்படும் பேச்சை ஒப்பிடுகையில்இன்னும் பரந்த வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் பயணிக்கவும் அங்கு நிலை கொள்ளவுமான ஆற்றல் எழுத்துக்கு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவரது எழுத்தும் பேச்சும் பிற பணிகளைப் போலவே "தீண்டாமைஎன்பதையே தமக்கான மேடையாகக் கொண்டிருந்தன. அந்த மேடையிலிருந்துதான்அவர் இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டதீண்டத்தகாத மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றிபிற அனைத்துச் சாதியினரும் மனிதத்துவம் பெற்று சகோதரத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டார்.
    சில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் தயங்கியதோஅதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் தவறியதோ இல்லை. "வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமைஎன்பதை வலியுறுத்தி வந்தவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். அந்தக் கோரிக்கை முதல் வட்டமேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியமே இல்லை என்பதைக் கண்ட பிறகே "தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதிஎன்னும் கோரிக்கையை முன்வைத்துத் தொடங்கினர்.
    அம்பேத்கர் தனது எழுத்துகள் சிலவற்றைத் திருத்தி தானே வெளியிட விரும்பினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எழுதிய, "இந்தியாவில் சாதிகள் : அவை செயல்படும் விதமும்,தோற்றமும் வளர்ச்சியும்' (இச்ண்tஞு டிண ஐணஞீடிச் : கூடஞுடிணூ Mஞுஞிடச்ணடிண்ட்எஞுணஞுண்டிண் ச்ணஞீ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt) என்னும் ஆய்வுக் கட்டுரையை "சாதி ஒழிப்புநூலுடன் இணைத்து பின்னதை செழுமைப்படுத்த விரும்பினார். சில நூல்களைப் பொருத்தவரைஅவரது விருப்பம் நிறைவேறியது. ஆனால் தனது எல்லா நூல்களையும் செழுமைப்படுத்தவோதிருத்தங்களுக்கு உட்படுத்தவோ முடியவில்லை. அவர் எழுதி முடிக்காத வரைவுகள் ஏராளமாக உள்ளன. ஒரே கட்டுரைக்கு பல வரைவுகள் எழுதியுமிருக்கிறார். அத்தகைய வரைவுகளில் சில பகுதிகள் சரிவர ஒழுங்கமைக்கப்படாதவையாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கட்டுரைக்கு முதலில் எழுதிய வரைவைக் காட்டிலும் கடைசியாக எழுதிய வரைவுதான் சிறந்தது எனக் கருத முடியாது என்றும்அதற்குக் காரணம் சில கட்டுரைகளின் முதல் வரைவுகள் அவற்றின் கடைசி வரைவுகளைக் காட்டிலும் செழுமையானவையாக இருப்பதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும்இந்த வரைவுகளும்கூட அம்பேத்கரின் ஆழ்ந்த புலமைக்கும் சமூக அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.
    அம்பேத்கர் பிறருடன் இணைந்து எழுதியவையும் உண்டு. எடுத்துக்காட்டாகபட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள்அரசியல் சட்டத்தின் வரைவு முதலியன. ஆயினும் மற்றவர்களுடன் இணைந்து எழுதப்பட்ட இவை எல்லாவற்றிலும் அவரது முத்திரைகள் இருப்பதை ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் "வேலை செய்யும் உரிமைசேர்க்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு அவையில் போராடினார். ஆனால்அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே போல,பொருளாதார சமத்துவத்தையும் சோசலிசத்தையும் ஆதரித்த அவரது விருப்பத்திற்கு மாறான முறையில் தனிச்சொத்து உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்டவிதி 31 சேர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது, “அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியதல்ல. மாறாகநேருபட்டேல்பந்த் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் விளைவு'' என்பதை பின்னாளில் அவர் மாநிலங்கள் அவையில் பேசுகையில் அம்பலப்படுத்தினார்.
    வரலாற்றுபண்பாட்டுமானுடவியல் ஆய்வுகளை மட்டுமே கொண்டவையாகத் தோன்றும் "சூத்திரரர்கள் யார்'?போன்ற நூல்களும் கூட மறைமுகமான அரசியல் குறிக்கோளைக் கொண்டிருந்தன. காந்தியின் செல்வாக்கிலிருந்து தாழ்த்தப்பட்டதீண்டத்தகாத சூத்திரர்கள்தீண்டத்தக்க சூத்திரர்கள் இருவரையும் விடுவித்துஅவர்களுக்கிடையே பரந்தநேச அணியை உருவாக்குவதுதான் அந்த அரசியல் குறிக்கோள்.
    இந்தியாவில் நிலவும் சுரண்டல்வறுமை ஆகியவற்றுக்கான தீர்வு சோசலிசம்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும்சுரண்டலும் வறுமையும் ஏற்றத் தாழ்வும் பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறினார். வழக்கமான மார்க்சிய விளக்கமான "பொருளாதாரம் என்பது அடித்தளம்,அரசியல்பண்பாடு முதலியன அந்த அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட மேலடுக்குஎன்னும் வழக்கமான மார்க்சிய விளக்கத்தைத் தலைகீழாகப் புரட்டினார் :
    ஆனால்அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்னும் அடிப்படையில் மதசமூக,அரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் தேவைப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோகட்டடமும் அந்த அளவுக்கு உண்மையானதுதான். அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால்அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோலசமூகத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால்,இருக்கும் சமூகஅரசியல் அமைப்புகளையும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும். (மேற்கோள் இடம் பெற்றுள்ள கட்டுரை : Gail Omvedt, Undoing the Bondage : Dr. Ambedkar's Theory of Dalit Liberation in K.C. Yadav (Ed.). From Periphery to Centre Stage : Ambedkar, Ambedkarism & Dalit Future, Manohar, Delhi, 2000, p.117
    அம்பேத்கர் காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவேகம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாகக் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் முக்கியப் பிரச்சனைகளில் ஒத்துழைத்ததுடன் அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஷியாசீனா ஆகியவற்றின் அயலுறவுக் கொள்கைகள் அவரது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை அவர் சில தயக்கங்களுக்கிடையே பாராட்டினார் : “ரஷிய புரட்சியை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அதனுடைய குறிக்கோள் சமத்துவத்தை உருவாக்குவதாகும்'' எனக் கூறிய அவர்சமத்துவத்தை உருவாக்குவது என்பது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து விடுவதல்ல என்றார். சகோதரத்துவமோ சுதந்திரமோ இல்லாத சமத்துவத்துக்கு மதிப்பு ஏதும் இல்லை என்றும்இவை மூன்றையும் வழங்கக்கூடியது பவுத்தமேயன்றி கம்யூனிசம் அல்ல என்றும் கூறினார் (Ambedkar Writings and Speeches, Vol.3(1987), P.462)
    இந்த அடிப்படையில் இருந்துதான் பிற்காலத்தில் கம்யூனிசம் பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. எனினும் அவரது கடைசி ஆண்டுகளில் அவர் எந்த அளவுக்கு புத்தர் மீது கவனம் செலுத்தினாரோஅந்த அளவுக்கு மார்க்ஸ் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். "புத்தராகாரல் மார்க்ஸா'என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றிஅவர் தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த "புத்தரும் அவர் தம்மமும்'என்னும் நூலிலும் கூட புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சி செய்திருப்பதைக் காணலாம். அம்பேத்கர் புதுப்பித்த பவுத்தம்அறிவியல் பரிமாணத்தைக் கொண்ட சோசலித்தைப் பரிந்துரைக்கிறது. அதுபத்தொன்பதாம்இருபதாம் நூற்றாண்டுகளில் பவுத்தத்தைப் புதுப்பிக்க இந்தியா,இலங்கைஜப்பான் முதலிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. “தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல''; "தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல'' என "புத்தரும் அவர் தம்மமும்நூலில் அம்பேத்கர் கூறுகிறார்.
    இந்தக் கூற்றுகளின் அடிப்படையில்அம்பேத்கர்பெரியார் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருதில் கொள்ளவும்தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும்பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும்தான் அம்பேத்கருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. முதலாவதாகமத மாற்றம் என்னும் விஷயம். 1935 – 36 ஆம் ஆண்டுகளிலேயே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். அதற்கான முக்கியக் காரணங்களிலொன்று,கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர விவசாயி சாதிகளின் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் பலகீனமான நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதாகும்.
    தலித்துகள் இந்து மதத்தை விட்டு ஏற்கனவே இருக்கின்றஇந்து மதம் அல்லாத ஒரு மத சமூகத்திற்குள் இணைவதன் மூலம் அவர்களது எண்ணிக்கை பலம் கூடும் என்று கருதினார். ஆனால்அவர் பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் மதம் மாறியபோதுஅவர்கள் ஏற்றுக் கொண்ட மதம்அம்பேத்கரால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்ட பவுத்தமேயன்றிஏற்கனவே கணிசமான எண்ணிக்கையினரைக் கொண்டிருந்த ஒரு மத சமூகத்தில் அவர்கள் இணையவில்லை. அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களிடையேஇந்து சமுதாயத்திலுள்ள புரோகிதர்களின் இடத்தை பவுத்த பிக்குகள் பிடித்துக் கொண்டிருப்பதுடன், "புத்தரும் அவர் தம்மமும்நூலில் அவர் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்பதோடுஇந்து மதத்திலிருந்து இன்னும் பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை வெளிக் கொணரவோகிராமப்புறங்களில் அவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.
    தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு மூல காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும்பார்ப்பனியக் கருத்து நிலையை ஏற்றுக் கொண்ட சூத்திரர்கள் துணைக்காரணமே என்றும்பார்ப்பனர்கள் தங்கள் கையிலுள்ள ஸ்விட்சை அழுத்தினால் சூத்திரர்கள் என்னும் பல்ப் எரிகிறது என்றும் அபத்தமான விளக்கத்தை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பொருளாதார,அரசியல்பண்பாட்டு அதிகாரங்கள் சூத்திர சாதிகளிலிருந்து உருவாகியுள்ள முதலாளி வர்க்கங்களால்,பணக்கார விவசாயிகளால்வர்த்தகர்களால்பார்ப்பனர்களுடனும் பிற மேல் சாதியினருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
    வன்னியர் சங்கம்தேவர் பேரவைகொங்கு வேளாளர் முன்னேற்ற சங்கம்நாடார் சங்கம் முதலியவை அனைத்துஅரசியல் அதிகாரமோபொருளாதார அதிகாரமோ இல்லாத ஆனால் பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை அதிகரித்த அளவில் பெற்றுக் கொண்டிருக்கும் தலித்துகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான கருவிகளேயாகும். தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்புகள் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதால்,அவற்றின் ஆதரவை நாடாத அரசியல் கட்சிகள் அரிதாகவே உள்ளன. வன்கொடுமைத் தாக்குதல்கள் பலவீனமான தலித்துகள் மீது மட்டுமின்றிஒப்பீட்டளவில் பலமுள்ள தலித்துகள் மீதும் நடக்கின்றன (கொடியங்குளம்).
    ஆளும் கட்சிகள் ஏதோவொன்றுடன் கூட்டு சேர்வதன் மூலம் தலித்துகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதும்கவர்ச்சிகரமான தலைவர்களின் பின்னால் அணி திரள்வதன் மூலமும்நீதிமன்றங்களை நாடுவதன் மூலமும்வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் போன்ற சட்டப் பாதுகாப்புகளைத் தேடுவதன் மூலமும் தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் தொடர்ந்து பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகள் மட்டுமேஅதிலும் குறிப்பாக கிராமப்புற தலித்துகள் மட்டுமே இன்று இந்துகிறித்துவ,முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரால் "பிறத்தியாராக', "அந்நியராக', "மற்றவராக'பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் "வன்முறை', வன்முறை நாடாமை என்னும் அறிவியல் வகைப்பாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டிய சூழலை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மறுபரிசீலனை என்பதும்கூடஅம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையையே தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டும். 
    சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறைஅம்பேத்கர் பொருளாதார ஆய்வு மய்யம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 27.11.2009 அன்று நடத்திய "அறிஞர் அம்பேத்கர் சிந்தனைகள்'கருத்தரங்கில், "தமிழில் அம்பேத்கர்என்ற தலைப்பில் எஸ்.வி. ராஜதுரை ஆற்றிய உரையின் சுருக்கமே இக்கட்டுரை.
    -எஸ்.வி. ராஜதுரை
    நன்றி - தலித் முரசு

    more
  • வாழ்க தோழர் சங்கமித்தை! - -தோழமையுடன் ஜீவமுரளி-
    (ஜெர்மெனில் நடந்த INSD மாநாட்டுக்காக எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்ட கட்டுரை இது)

    தோழர்களே!
    மாற்றுக்கருத்தாளர்களே!
    முன்னைநாள் மாற்றுக்கருத்தாளர்களே!
    பௌத்தத்தை தழுவிய சங்கமித்தையையும், அம்பேத்காரையும், அயோத்திதாசரையும், என்னையும் போலல்லாது, மகிந்த சிந்தனையை மட்டும் தழுவியவர்களுக்காக நான் ஓரிரு கதைகளும், ஓரிரு கருத்துக்களும் சொல்ல ஆசைப்படுகிறேன். கூடவே என் கனவுகளையும் சொல்ல அனுமதி தரும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    பாவங்களை மக்களே சுமக்கவேண்டும் என்ற அறவியல், அறிவியல், அரைஅவியல் விதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல எல்லாக் கடவுள்களையும் தெய்வங்களையும் தூக்கி எறிந்து விட்டு, பாவங்கள் சுமத்தப்பட்ட மக்களின் சார்பிலும் என் கனவுகளைச் சொல்ல பிரத்தியேக அனுமதியை வேண்டி நிற்கிறேன்.

    கொல்லாமை, இல்லாமலில்லாமை என்ற புத்தரின் அளப்பெரிய மானுடத் தத்தவத்தினையும், கனவையும் இலங்கையில் வெள்ளரசங்கன்று ஒன்றை நட்டு சங்கமித்தையும் மகிந்தனும் மக்களுக்கு அறிவித்தனர் என ஒரு வரலாற்றுக் கதையுண்டு. அதை சிறுவயதில் படித்திருக்கிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள்.

    துரோகம், தேசத்துரோகம் என்ற இரண்டு அருவருக்கத்தக்க வார்த்தைகள் இலங்கையில் தோன்றுவதற்கு முன்னரும், தமிழ்நாட்டில் உள்ள புலிமார்க் அப்பளத்திலிருந்து புலிச்சின்னத்தை பிராபகரன் பிரதியெடுத்து தமிழ்த்தேசியக் கொடியாக வடிவமைக்கும் முன்னரும், சிங்கக் கொடிகளை மகிந்தவின் அரசு இலங்கையின் மூலை முடுக்கெங்கும் பறக்கவிட முன்னரும், அம்பாந்தோட்டைலயில் சீனத்; துறைமுகமும், இலங்கையில் இந்தியக் கம்பனிகளும், மக்களினதும் மகிந்தவினதும் அதிகாரங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது பற்றிய சச்சைகளும் போட்டிகளும் வருவதற்கு முன்னரும், குறிப்பாக வடக்கில் வசந்தமும், கிழக்கில் விடிவும் ஒளியும், தெற்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் வருவதற்கு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் புவியில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் இயற்கையையும், சூரியனையும் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். கடவுளர்களாக கொண்டாடினர். இயற்கையின் சீற்றங்களினாலும் விடுவிக்கப்பட முடியா இரகசியங்களினாலும் மனிதர்கள் அவற்றைக் கண்டு அஞ்சி நடுங்கினர். பயம் மனிதர்களை ஆண்டது. மனிதர்கள் இயற்கையை வணங்கினர்.

    இயற்கையின் அனர்த்தங்களில் இருந்து தப்பிப் பிழைத்தலுக்காகவும், உயிர் வாழுதலுக்காகவும் மனிதர்கள் போராடினர்கள். இயற்கையின் இரகசியங்களை விடுவிக்க முயன்றனர். மனிதர்கள் இயற்கையுடன் போரிட்டு வெல்வது, இயற்கையை அடிபணிய வைப்பது என்ற தொடர் போரியல் வரலாற்றில் நீர் நிலம் காற்று பெண்கள் குழந்தைகள் என்ற மனிதவாழ்வின் ஆதாரங்களை அலட்சியப் படுத்தி விட்டு பொருட்களையும் செல்வங்களையும் அதிகாரங்களையும் குவிப்பதையே குறியாய்க் கொண்டனர். மனிதனை மனிதன் கொல்லாமல் வாழவும், இல்லாமை தீரவும் போராடிய புத்தரின் கனவும், தீண்டாமையை இல்லாதொழிக்க போராடிய அம்பேத்கரின் கனவும், மனதில் பட்டதை பட்டபடியே சொல்லிய அயோத்தி தாசரின் கனவும், எனது கனவும், உங்களது கனவும், பாவமே செய்யாத மக்களின் கனவும் பலிக்காமலே போயின.

    கனவுகளை பலிக்க வைப்பதற்காகத் தான் தெய்வங்களும் மன்னர்களும் மீட்பர்களும் மாவீரர்களும் தேசப் பற்றாளர்களும் உருவாகினர் என்ற வாதப் பிரதிவாதங்கள் பல முனைகளிலும் மாற்றுக் கருத்தாளர்களாலும், கடவுள் நம்பிக்கையாளர்களாலும் வைக்கப்படுகின்றன. கொல்லாமை, இல்லாமல் இல்லாமை என்ற மனிதர்களின் கனவுகளை பலிக்க வைக்க மக்களை பலி கொடுப்பது தவிர்க்க முடியாத வரலாற்று முடிவு என மேற்கோள்களுடனும் தொடர்ந்தும் வாதப்பிரதிவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் மாற்றுக் கருத்தாளர்களை, போட்டுத் தள்ளுவது புலிகளுக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் மட்டுமான வழக்கமல்ல, அது இராசதுரோக காலத்திலிருந்து வழிவந்த கலை என கொலையம்சத்துடன் அரசியற் புனைவுகளை செய்யும் முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்களையும் இந்தப் புவி தாங்கிய படியே சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

    சூரியனுக்கும் இயற்கைக்கும் அஞ்சி நடுங்கி அவற்றை கடவுளாக கொண்டாடிய மனிதனின் வரலாறு கொலை காரர்களையும், கொள்ளைக் காரர்களையும் கண்டு அஞ்சி நடுங்குகின்ற வரலாறாக இன்று மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களை கொண்டுடாடுகின்ற வரலாறாக, நம்புகின்ற வரலாறாக, போற்றுகின்ற வரலாறாக இன்று மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

    விடுவிக்கப்படாத இயற்கையின் இரகசியங்களை கடவுளாக கொண்டாடுகின்ற மனிதர்களும் இந்தப் புவியில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல விடுவிக்கப்படாத அரசியல் இரகசியங்களையும் கொலைகளையும் கொள்ளைகளையும் கண்டு அஞ்சி நடுங்குகின்ற மனிதர்களும் இந்தப் புவியில் வாழ்ந்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கொலை காரர்களையும் கொள்ளைக்காரர்களையும்; கட்சித் தலைவர்களையும் கடவுளர்களாக கொண்டாடும்படி பாவப்பட்ட மக்களும் பணிக்கப்பட்டுள்ளனர். “கடவுள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை கொண்டாடுபவன் காட்டுமிராண்டி” என்ற பெரியாரின் அறிவியல் தத்துவத்தினைக் கற்றுத் தேர்ந்த முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்கள் கூட கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் கடவுளர்களாக கொண்டாடும் ஓர் அரசியற்சூழல் இலங்கையிலும் புகலிடத்திலும் இன்று உருவாகியிருக்கின்றது. அச்சமும் ஆசையும் கையறுநிலையும் கடவுள் மறுப்பை அரசியலாகக் கொண்ட இ.வே.ராமசாமியை குழிதோண்டிப் புதைக்கும் அரசியலில் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

    மாற்றுக்கருத்து என்றால் என்னவென்று மிகத் துல்லியமாக சொல்லிவிட்டுப் போன வோல்டேயர் என்ற மனிதன் சகமனிதன் குறித்த ஆழ்ந்த அக்கறையினால் சொல்லிவிட்டுப் போன அதியற்புதமான தத்துவமான “நான் உனது கருத்துடன் உடன்படாவிட்டாலும் உன் கருத்தை சொல்வதற்கா போராடுவேன் அல்லது உயிரையும் கொடுப்பேன்” என்ற உயிருள்ள வார்த்தைகளை காப்பாற்றுவதை கைவிட்ட முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்கள், கொலை காரர்களையும் கொள்ளைக் காரர்களையும் கட்சித் தலைவர்களையும் கையெடுத்த கும்பிட வேண்டிய துர்ப்பாக்கிய சூழலையும் இன்றைய இலங்கையின் அரசியல் உருவாக்கி தந்திருக்கின்றது.

    முன்னைநாள் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் மாவீரர்களும் கடவுளர்களுமாகவிருந்த விடுதலைப் புலிகளை, ஆசியாக் கண்டத்தின் மிகப்பெரும் கொலைகாரர்களும் கொள்ளைக்காரரும் அரசியற் சண்டியரும் சேர்ந்து ஒரு இரவு முடியமுன் அழித்திருக்கிறார்கள் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்த உண்மை. இதற்காக மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மட்டும் ஏன் பிரத்தியேகமாக கும்பிடச் சொல்கிறார்கள்? ஏன் வணங்கித் துதிபாடச் சொல்கிறார்கள்? இதற்கு விடை காணுவதே அவசரமானதும் அவசியமானதும் பணி என நான் ஒருநாளும் சொல்லப் போவதில்லை. இதற்கான பல விடைகள் முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்களால் கதைகதையாக சொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றன. கட்டுரைகளாக எழுதப்படடுகின்றன. இது கூட கடவுள்களால் தண்டிக்கப்படாமல் தப்பிப்பிழைத்தல் அல்லது உயிர்வாழுதல் என்ற வரையறைக்குள் முழுமையாக கொள்ளமுடியாது. இதற்கு மிகச்சரியாக பொருந்தக்கூடிய அரசியற் சொல்லாடல் ஒன்று தமிழிலும் இருக்கின்றது அதை “பிழைப்பு வாதம்” என அழகாகச் சொல்வார்கள். உயிர் பிழைத்து வாழுதல் என்பது மனிதனின் தேவையும் இயல்பும் அடிப்படை உரிமையும் கூட. இதை நான் பிழைப்புவாதம் என்ற அரசியல் அர்த்தத்திலிருந்து பிரித்து வேறுபடுத்தியே பார்க்கிறேன். பாவங்கள் பழிகள் சுமத்தப்பட்ட மக்களை ஒருபக்கத்தில் தூக்கி வைத்துவிடுவோம். உதாரணத்திற்கு ஒரு டக்லஸ் தேவானந்தா, ஒரு சந்திரகாந்தன், ஒரு வினாயகமூர்த்தி முரளிதரன்;, ஒரு சரத் பொன்சேகா, ஒரு சந்திரிகா புலிகளிடமிருந்து தப்பிப் பிழைத்து உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது “தப்பிப் பிழைத்து உயிர் வாழ்தல்” என்பதற்கான வலுவான குறியீடுகள். மாறாக இந்த நபர்கள் நாங்கள் ஒருபக்கத்தில் தூக்கி வைத்த மக்களின் மீது மிளகாய் அரைப்பதும், கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் பாதுகாப்பதும் அவர்களின் கொலை அரசியலுக்கு நியாங்கள் சொல்வது என்பதும் “பிழைப்பு வாதம்” என்பதற்கான வலுவான குறியீடுகள்.

    கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கருத்துச் சுதந்திர மறுப்புக்கும் மத்தியில் இலங்கையில் டெவலப்மன்ற் நடந்து கொண்டிருக்கின்றன என ஒரு முசுப்பாத்தியான பிரச்சாரம் அரசாலும் முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்களாலும் செய்யப்படுகின்றன. இது என்னுடைய தலையை சுற்ற வைக்கிறது. எரிச்சலூட்டுகிறது. பாவங்கள் தலைகளின் மேல் சுமத்தப்பட்ட மக்களின் தலைகளை தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசும் அதன் பிரச்சார ஊடகங்களும் அரசின் வாரிசுகளும் சொல்லும் “டெவலப்மனற்” என்றால் என்னதான் என்று அறியும் ஆவலில் நான் பல மொழி அகராதிகளையும் புரட்டிப் பார்த்து விட்டேன். ஒரு விசயமும் பிடிபடவில்லை.
    தோழனும் புகைப்படம் பிடிக்கும் கலைஞம் கவிஞனுமாகிய தமயந்தியிடம் “டெவலப்” என்றால் என்ன என்று கேட்டேன்.

    “ஏன்ரா! உது கூட தெரியாமல்த்தானா இன்னும் உயிரோடை இருக்கிறாய்” என்று கேட்டான்

    நானும் “ஓமடா…” என்று வார்த்தையை இழுத்தபடியே

    “விளக்கமில்லாதபடியால் தானே கேட்கிறேன்” என்றேன்.

    “அது சின்ன விசயமடா. இப்ப பார் இந்தக் கமராவைப் பார் நான் பிடிச்ச போட்டோக்கள் இந்தப் பிலிம் ரோளுக்குள் இருக்குது. இதை வெறும் கண்ணால் பார்த்தால் உனக்குத் தெரியாது. பிலிம் ரோலை கொண்டு போய் பிலிம் கழுவுற கடையில குடுத்தால், கடைக்காரன் அதை -டெவலப்- செய்து கண்ணால் பார்க்கிறமாதிரி கழுவித் தருவான். அதற்கு -நெக்கற்றிவ் என்று பெயர் சொல்வார்கள். அந்த நெக்கற்றிவை ஒரு பேப்பரிலை அச்சடித்தால் அதை -பொசிற்றிவ்- எண்டு சொல்வார்கள்”

    எனக்கு உண்மைலிலேயே தலை சுற்றியது “பொறு பொறு எனக்கு உண்மையியேலே விளங்கவில்லை ஒருக்கா திருப்பிச் சொல்லடா”

    டேய்! உன்ரை தலையிலை இடி விழ…! அதாவது கண்ணுக்குத் தொரியாத காட்சிகள் இருக்கிற பிலிம் ரோலை கழுவினால் நாங்கள் காணுவது நெக்கற்றிவ். அதை பேப்பரிலை அச்சடித்தால் காணுவது பொசிற்வ். இதுதான் டெவலப்பின்ரை விதிமுறை” என்றான்.

    “மச்சான் நான் கேக்கிறனெண்டு கோவிக்காதை பொசிற்றிவ்வை நெக்கற்றிவாய் மாத்தேலாதோடா?”

    ”போடா போ நெக்கற்றிவ் அப்பிடியேதான்ரா இருக்கும். ஏன் பொசிற்றிவை நெக்கற்றிவ்வாய் மாத்தோணும் எண்டு நினைக்கிறாய்? உனக்கென்ன HIV பொசிற்றிவாடா?” என்று கேட்டான்.
    “இதைத்தான் பிலிம் காட்டுவது என்று சொல்வார்களா?” என்று திருப்பிக் கேட்டேன்.

    அவனது முகம் கோபத்தால் சிவந்தது “கோவிக்காதை மச்சான் நான் பேப்பரிலை பொசிற்றிவாய் அச்சடித்து விடும் டெவலப்மன்ற் பற்றிக் கேட்கையில்லை ஒரு தேசத்தின் டெவலப்மன்ற் என்றால் என்னவென்ற அர்த்தத்தில்தான் கேட்டேன். இலங்கையிலை டெவலப்மன்ற்; நடக்குதென்று அரசும் அரசின் வாரிசுகளும் முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்களும் சொல்கிறார்கள் அதுதான் கேட்டனான்.”

    அவனின் கோபம் இன்னும் அதிகரித்தது முகத்தை திருப்பிக் கொண்டான். கேட்கக் கூடாத கேள்வி ஒன்றை கேட்டுவிட்டேனோ என்று பயந்துவிட்டேன். எனக்கு அவனை சமாதனப் படுத்தும் வழி தெரியவில்லை என் கேள்விக்கு விடை அறியும் ஆவலில் மீண்டும் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தேன்

    “இல்லையடா இலங்கையிலை பாரிய நெடுஞ்சாலைகள் போடப் படுகின்றனவாம். இந்துக் கோயில்களெல்லாம் புனரமைக்கப் படுகின்றதாம். இன்னும் கேளன், திருகோணமலையிலை முப்பது வருசமா திறக்காத ஆலயம் திறக்கப் பட்டிருக்காம், மீள் குடிறே;றம் செய்யப்பட்ட மக்களுக்கு விசுக்கோத்தும் வீடு கட்ட காசும் கொடுக்கப்படுகிறதாம். இதைப் பார்த்தால் இலங்கையிலை டெவலப்மன்ற் நடக்கிற மாதிரித்தான் தெரியுதடா” என்றேன்.

    ஏன்ரா பன்னாடை! விசுக்கோத்து!! விசுக்கோத்து குடுத்தா டெவலப்மன்ராடா? என்று தன் கையில் வைத்திருந்த கமறாவை நிலத்தில அடித்து நொருக்கினான். நான் கூனிக் குறுகிப் போய் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.


    “டேய் டேய்… கதையாதை. உப்புக்கு வழிலில்லாத அரசாங்கமும் அவையளின்ரை ஆக்களும் டெவலப்மன்ரைப் பற்றிக் கதைக்க வந்திட்டினம். சனம் உப்புக்கு வழியில்லாமல் திரியுதடா. அது தெரியுமா உனக்கு..? இவரும் டெவலப்பெண்டு விசுக்கோத்துத் தனமா கதைக்க வந்திட்டாராம்! போடா பன்னாடை” என்றான் கோபம் தணிந்த குரலில்.

    கட்டப்படுகின்ற நெடுஞ் சாலைகளில் எல்லாம் வல்ல கடவுளர்களை ஊர்வலமாக நடத்தி வந்து ஆலயங்களில் இருத்திவைத்து மக்ளை இரட்சிப்பதற்கு முயற்சி செய்யும் ஒரு அரசிடம் எப்பிடி உப்பு இல்லாமல் போகும் என்ற கேள்வி என்னை குடைந்தெடுத்தது.

    ”என்னால் நம்ப முடியவில்லை மச்சான். உப்புக்கு வழியில்லாத அரசாங்கம் உலகத்தில எங்கேயாவது இருக்குதா நீ பகிடி விடாதே தமயந்தி” என்றேன்.

    ”அப்ப ஏன்ரா பிடிச்ச மீனுகள் எல்லாத்தையும் சனம் கடலிலை திருப்பிக் கொட்டுதுகள்? சனத்துக்கு என்ன விசரே..?” என்று திருப்பி கேட்டான்.

    ”எனக்கு தலை சுத்துது தமயந்தி விளக்மாக சொல்லு” என்றேன்.

    ”எடேய் முப்பது வருசமா அரசு மீன் பிடிக்கத் தடை போட்டதாலை வடகடலில், மன்னார், தீவுக்கடலில் மீன் விளைஞ்சுபோய்க் கிடக்குது. அதுதான்ரா டெவலப் பண்ணிப் போய்க் கிடக்குது. இப்ப சனம் இரவிலையும் பகல்லையும் மீன் பிடிக்குதுகள். நல்ல மீன் கிடைக்குது. கிடைக்கிற மீனை சந்தைப்படுத முடியாமல் சனம் கடலிலை கொட்டுதுகள்”

    ”என்ன கடலிலை கொட்டுதுகளோ? அப்ப சனத்துக்கு விசர்தான்” என்றேன்.

    ”அப்பிடி இல்லையடா.. உள்@ரிலை சந்தைப்படுத்திற மீனை விட மீதியையும் கெட்டுப்போகாமல் சந்தைப்படுத்த வேணும். உதாரணத்துக்கு கொழும்புக்கு மீன் அனுப்பி சந்தைப் படுத்துறதெண்டால் ஐஸ் வேணும். வடக்கிலை ஒரு ஐஸ் செய்யிற தொழிற்சாலைகளும் இல்லை. மீனைப் பதப்படுத்தி சந்தைப்படுத்த இன்னொரு வழிதான் கருவாடு போடுறது. கருவாடு போடுவதற்கு உப்பு வேணும் அங்கை சமைக்கவே உப்புக் காணது”

    ”ஏன் தமயந்தி ஊரிலை புளி கூடவா இல்லை?” என்று கேட்டேன்

    ”ஏன் கேட்கிறாய்?” என்றான்

    ”இல்லை புளியிருந்தால் புளியாணம் போட்டு மீனைப் பதப்படுத்தலாம்தானே?” என்றேன்.
    அவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

    நான் வெட்கத்தால் ஆகாயத்தையும் சூரியனையும் மாறிமாறிப் பார்த்தேன். உப்பு மழையாகக் கொட்டக்கூடாதா என்று ஏங்கினேன். உப்பை உற்பத்தி செய்வதுதான் சூரியனின் அவசியமானதும் அவசரமானதும் பணியென எனக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்

    -எனது பொருளை நான் உன்னிடம் விற்க முடியாவிட்டாலும் கூட, உனது பொருளை விற்பதற்கான உரிமைக்காக நான் உயிரையும் கொடுப்பேன்- என ஒரு அரசு சொல்லுமாயின் அங்கே டெவலப்மன்ற் நடக்கின்றது எனக் கொள்ளலாம்.

    வோல்டெயரின் வார்த்தைகளை சூரியன் தனது கதிர்களில் தாங்கி புவியில் விதைத்தபடியே வலம் வந்து கொண்டிருப்பதை முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்களும், கொலைகாரர்களும், கொள்ளைக் காரர்களும் நன்கு அறிவார்கள். வோல்டேயரை சமூக விரோதியாக்கவும், சூரியனைச் சுட்டு விழுத்தவும் எடுக்கப்பபட்ட முயற்சிகள் யாவும் வெளிச்சத்துக்கு வந்தபடியேதான் இருக்கின்றன.

    ஒருவேளைச் சோற்றிற்கும், குடிக்கத் தண்ணீருக்கும், படுத்துறங்க ஒரு குடிசைக்கும், உப்புக்கும் வழியற்ற இலங்கைத் தனித்தீவின் பாவப்பட்ட மக்களுக்கு நெடுஞ்சாலைகள் எதற்காக போடப்படுகின்றன? டெவலப்மன்ற் என்றால் என்னவென்று விளங்கிக் கொள்வது இன்னும் கடினமாக்கப் பட்டிருக்கிறது.

    நிலநடுக்கத்தால் எல்லாவற்றையும் இழந்துபோன கெயிட்டி அகதிகளுக்குக் கூட பன்னாட்டு அரசுகள் விசுக்கோத்தும் கைநிறை காசும் கொடுப்பதாக செய்திகளும், செய்திப் படங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. கைநிறைய வைத்திருக்கும் காசை வைத்து வீடுகள் கட்ட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை வைத்துக் கொண்டு மேலும் சில காலம் உயிர் வாழுவதற்கான விசுக்கோத்துப் பெட்டிகளை பன்னாட்டு அரசுகளிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் கெயிட்டி மக்கள் இறக்குமதி செய்யமுடியும் என்று மட்டும் தோன்றுகிறது.

    டெவலப்மன்ற் என்ற பெயரில் புதிய கடவுள்களையும், கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் அபிவிருத்தி செய்வதற்காக கோயில்களும் புனரமைக்கப்படுகின்றன. கோபுரங்கள் கட்டப்படுகின்றன. இவற்றை பார்வையிடுவதற்காகவும் உல்லாசப் பிரயாணத்துறையை வடக்கிலும் கிழக்கிலும் வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் லிட்டில் எயிட் அன்ட் தேசம்நெற் கோ என்ற லண்டன் கம்பனியொன்று முயற்சிகளை எடுத்து வருகிறது. காற்றுள்ள போதே கம்பனிகள் தூற்றிக்கொள்ளவது அபிவிருத்தியென்று நாங்கள் கொள்ள முடியுமா? ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்குள்ள நெடுஞ்சாலைகளினதும்; கோவில்களினதும் எண்ணிக்கைகளையும் வைத்துத்தான் கணிப்பிட முடியும் என யாராவது சொல்லியிருக்கிறார்களா? ஆம், தேசம்நெற் இணையத்தளத்தின் ஆசிரியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். உப்பு மூடைகளுக்கு வழியற்ற ஒரு அரசு எப்பிடி ஒரு தேசத்தை, தேசம் நெற்றையும் டெவலப் பண்ணப் போகின்றது என்ற கேள்விகள் எங்களின் முன்னே கிடக்கின்றன.

    உங்களினதும், எனதும் பாவங்கள் சுமக்கப் பணிக்கப்பட்ட மக்களினதும், புத்தரின் கனவுகளுமாகிய கொல்லாமை இல்லாமை தீண்டாமையை கொலைகாரர்களினாலும் கொள்ளைக் காரர்களினாலும் கடவுள்களினாலும் எப்படி இல்லாதொழிக்க முடியும் என்ற கேள்விக்கு சரத் பொன்சேகாதான் விடை என நீங்கள் யாரும் கணிப்பிட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதேபோலத்தான் சிறுபான்மையின மக்களும் கணிப்பிட்டிருக்க மாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தும் ஏன் சரத் பொன்சேகா என்ற கொலையாளிக்கும் கொள்ளைக் காரனுக்கும் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் அதிகம் கிடைத்தன என்று கேள்வி கேட்டால் கொலைகளையும் கொள்ளைகளையும் யார் கூடுதலாக செய்வது?, யார் குறைவாகச் செய்வது என்ற ஒப்பீட்டு அடிப்படையில் அவர்கள் முடிவுகளுக்கு வந்திருக்கலாம். அல்லது மகிந்தவை பழிவாங்கும் தெரிவாகக் கூட இருக்கலாம். எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் அற்ற மக்கள் கடவுளர்களிடமும், கொலைகாரர்களிமும், கொள்ளைக்காரர்களிடமும் நம்பி மோசம் போவதும் மோட்சம் அடைவதும் புதியவிடயங்கள் அல்ல! நான் பௌத்தத்தை தழுவியதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

    மரியாதைக்குரிய தோழர்களே, மாற்றுக் கருத்தாளர்களே! வணக்கத்துக்குரிய முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்களே! மகிந்த மன்னர்களிகனால் துரத்தியடிக்கப்பட்ட ஊடகவியலளர்களே!, கொல்லாமை, இல்லாமை, தீண்டாமையை இல்லாமல் செய்ய கனவு காணும் பௌத்தத்தை தழுவுவதில் நான் மிகவும் மகிழுச்சி அடைகிறேன்.

    இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியலில் உள்ள சிக்கல்களின் முடிச்சுகளை எப்படி அவிழ்ப்பது என நீங்களும் அக்கறையுடன் வாதப் பிரதிவாதங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போலவே நானும் சிறுபான்மை இனங்களின் அடிப்படை அரசியல்கள் உரிமைகள் குறித்தும் விவாதித்தும் கனவுகளும் கண்டு வருபவன்.

    புலிகளின் ஆயுத அரசியலின் அழிவின்முன், தமிழ்த்தேசப்பற்றின் காரணமக கட்டாய உறக்கத்தில் கிடந்த சிறுபான்மை இனங்களுக்குள்ளேயேயான சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் மெல்ல டெவலப்பண்ணத் தொடங்கிவிட்டன. பிரான்சிலுள்ள தலித் முன்னணியின் தலைவர் தேவதாசன் முயற்சியால் «சிறுபான்மை மக்கள் மாகா சபை» மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. தலித்துக்கள் அமைப்பாவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப் பட்டிக்கின்றது. நான் ஒரு தலித் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற அரசியல் அடிப்படையில் அதை வரவேற்கிறேன். ஆதிக்க சாதிகளெல்லாம் தமிழத்தேசிய கூட்டமைப்பினூடாகவும், பழையமாணவர் சங்கங்கள் மூலமாகவும், பத்திகைகள் மூலமாகவும் இணையத் தளங்கள் மூலமாகவும் அமைப்பு வடிவம் பெறும் பொழுது, ஏன் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் «ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு» ஆகக் கூடாது? இந்த முயற்சியில் முன்பு சாதி எதிர்ப்பு போரட்டங்களில் பங்குபற்றிய தோழர்களும், எனது தமிழாசிரியர்களில் ஒருவருமான தெணியான் அவர்களும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

    அந்த மகிழ்ச்சி தலித் மேம்பாட்டு முன்னணி அமைப்பினர் மக்களை உப்புக்கண்டம் போடும் மகிந்தவின் அரசை புகழ் பாடுவதை நினைத்தால் அடுத்த கணமே காணமல் போய்விடுகிறது. அப்படி புகழ் பாடுவதால் தலித் சமூகமே மகிந்த அரசின் பின் அணிவகுத்து நிற்கின்றது என்று யாரும் பொருள் கொள்ளத் தேவையில்லை. அப்படிப் பார்த்தால் புலிகள் யாழ் இசுலாமிய சமூகத்தை துரோகச் சமுகமாக அறிவித்தது சரியென்று ஆகிவிடும். இது அறிவுபூர்வமான லொஜிக் அல்ல. ஆரோக்கியமான லொஜிக்குமல்ல காணமல் போகும் சிங்கள் ஊடகவியலாளர்கள் பற்றியோ கொல்லப்படும் ஊடகவியலாளர்கள் பற்றியோ நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியளர்கள் பற்றியோ எந்த அக்கறையுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அரசின் ஜனநாயக மறுப்பைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், விசுக்கோத்து டெவலப்மென்ற் இலங்கையில் நடைபெறுவதாக கூறுவதும், மகிந்த அரசை புரட்சி அரசாக வர்ணிப்பதும் என்ன மண்ணாங்கட்டி லொஜிக் என்றுதான் விளங்கவில்லை.

    தோழர்களே!
    இந்திய தேசம் எங்களுக்கு பல பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது. தலித் போராட்டங்கள் ஒரு பக்கமாயும் தெடர்ச்சியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலித் தலைமைகள் அதிகரங்களுடனும் இந்துத்துவ வாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. ஒரு பிரதியை பல பிரதிகளாக வாசிகத் தெரிந்த நாங்கள் இந்திய தேசத்திலிருத்து எல்லாவற்றையும் பிரதி செய்ய வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன். மேலும் இலங்கைத் தலித் மக்களுக்கு ஒரு மாயாவதியோ, ஒரு திருமாவளவனோ தேவை இல்லை என்றும் கருதுகிறேன் புலிகளின் அழிவின்பின் மலையகத் தலித் மக்களின் சம்பள உயர்வுப் போராட்டமும் அதன் வெற்றியும் இலங்கையில் உள்ள தலித் மக்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் பெரும்பான்மை இனத்திற்கும் மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. வாழ்க பௌத்த தத்துவம்! வாழ்க தோழர் சங்கமித்தையின் நாமம்!!

    நன்றி தோழர்களே.

    -தோழமையுடன் ஜீவமுரளி-

    more
  • பெரியாரின் தலித் எழுத்து

    தலித் எழுத்து – வேதனைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமின்றி, சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இது, தலித்தாகப் பிறந்தவர்களுக்கும், அவ்வாறு உணர்கின்றவர்களுக்குமே கைகூடும். பெண் விடுதலைக்காக ஓங்கி ஒலித்ததைப் போலவே, தீண்டத்தகாத மக்களின் உணர்வுகளை முற்றாகப் புரிந்து கொண்டதாலேயே – பெரியாரின் எழுத்து, தலித் எழுத்தைப் போல் அமைந்திருக்கிறது! "நாம்' "நம்மில் கீழ்த்தர மக்கள்' என்றெல்லாம் பெரியார் பிரித்துப் பார்த்து, தலித்துகளை இழிவுபடுத்தினார் என்று அவர் மீது கண்மூடித்தனமாக அவதூறுகளைச் சுமத்தினார்கள்; இன்னும் கூட "கிசு கிசு'த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய "சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூல் வெளிவருவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் கவனத்திற்குரியது. இப்புரட்சியாளர்கள் இணைந்த புள்ளியும் இதுவே.

    "தலித் முரசு' 13ஆம் ஆண்டின் சிறப்புக் கட்டுரையாகபெரியாரின் "தலித் எழுத்தை' வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. "எவனெழுதினாலென்ன?' என்ற புனைப் பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை – "குடிஅரசு' 25.10.1931 ஆதாரம் : "பெரியார் களஞ்சியம்', தொகுதி 25, பக்கம் : 102 – 114

    சகோதரர்களே! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை, இந்தியாவில் சுமார் ஏழு கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டுமென்றும், சிலர் குளிப்பது கூட போதாதென்று ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.

    இவை தவிர, நமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணறோ கிடையாது. நாம் எந்தக் குளத்தையாவது, கிணற்றையாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச்சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாக வேண்டும். நாம் குடி இருக்க வேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும் கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்து விடுமாம். நாம் வாழும் இடத்துக்கு, "சேரி' என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை செத்தை கொண்டு வந்து போட்டு வைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், அவற்றிற்குக் காவலாய் இருக்குமாம்!

    நமக்கு வேலையோ தோட்டி வேலைதான் பாரம்பரியமாய் சொந்தமானது; மற்றும் ஊர் கூட்டி, மலம் அசிங்கம் முதலியவற்றை எடுத்துச் சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்துவதும், கழனி வயல் அப்புறப்படுத்துவதும், கழனி வயல் முதலியவைகளுக்கு குப்பை, செத்தை முதலியன கொண்டு போடுவதும் மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து, மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச் சேரும் வரையில் சுய வேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும் மற்றும் இதுபோன்றவற்றுடன், தப்புக் கொட்டுதல், செத்துப் போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின் மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக் கொள்ளுதல்; இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல் முதலிய காரியங்கள் செய்ய வேண்டியதும் நமது பிறப்புரிமையாகும்.

    இவை ஒரு பக்கமிருந்தாலும் நம் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பது, மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாய் இருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. ஏதாவது ஒன்று இரண்டு பள்ளிக் கூட வசதிகள் இருந்தாலும் நமக்கு சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கவும், பையனுக்கு சாப்பாடு போடவும் சவுகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங்களைப் பற்றி நினைக்கவே கூடாது. இவை தவிர, நமக்கு நாவிதன் கிடையாது. வண்ணான் கிடையாது. நாமாகத் துறை வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால், அங்கு 20 பறையர் வீடு இருந்தால், அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடி மக்களுக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்ய வேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சை வாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாய் "பிச்சை போடுங்க சாமி' என்று கூப்பாடு போட்டு பிச்சைச் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும்.

    பிச்சைச் சோறு கேட்கும் சட்டி கூட முழுசாய் இருந்தால், அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத்தில் பறையன் முழு சட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால், கிராமத்திற்குக் கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஓர் அய்தீகம் உண்டு. ஆதலால் நம்ம சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு தான் சோத்துப் பிச்சைக்குப் போக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்குப் பிச்சைச் சோறு போட மாட்டார்கள். ஏனெனில், பறையருக்குச் சோறு போட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய் (சேஷமாய்) போய் விடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக் கொள்கை உண்டு. அதென்னவென்றால், சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்குத் தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குழிவெட்டிப் புதைத்து விடும்படி செய்வதும் உண்டு. நமக்குப் பிச்சைச் சோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப் போனதையும், ஊசிப் போனதையும்தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடிப்போய்க் கொண்டு வந்து போடுவார்கள். நிற்க.

    துணி விஷயத்திலும் இப்படித்தான். நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசு கிடையாது. கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக்காரர்கள் கட்டிக் கிழித்த கந்தலையே கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால், வேட்டியை இடுப்பில் முழங்காலுக்குக் கீழே தொங்கவிட்டு கட்டக்கூடாது. மேலேயும் துணி போடக் கூடாது, பெண்கள் மார்பை மூடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் மற்றும் தங்கம், வெள்ளி, நகை போடக்கூடாது என்பதும், குடை பிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என்பதும், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது என்பதுமான பல நிபந்தனைகளுண்டு.

    இவ்வளவும் தவிர, தமிழ் நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது, அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும் குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம் மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது; உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்க மாட்டீர்கள். அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை "நாயாடிகள்' என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக் கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில்தான் எந்த ரோட்டிலும் இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் எவ்விதத் தொழிலும் செய்ய முடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு "தம்பிரானே தம்பிரானே' என்று கூப்பாடு போடவே – கூடும் சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டு

    விட்டுப் போனால் – மாலையில் ஒருவருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத்தவிர எங்காவது வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும் மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளைக் கல்லால் அடித்துப் பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது. இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால், அவர்கள் தெருவில் நடக்கும் போதே "ஹா' "ஹா' என்று சத்தம் போட்டுக் கொண்டே வர வேண்டும். ஏனெனில், “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன், எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே விலகிக் கொள்ளுங்கள்'' என்று குறிப்புக் காட்டுவதற்காக, அதாவது மூலை முடுக்குகளில் மோட்டார் கார்கள் வரும்போது, எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும் அது "ஹாரன்' ஊதுவது போல் சத்தம் போட வேண்டும். ஆனால், மோட்டார் மூலை முடக்குகளில் மாத்திரம் ஊதும்; இவர்களோ நேர் ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்கு தான் கீழ் ஜாதிக் காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டியதாகும்.

    இவை தவிர, சமூகத் துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது, நாம் எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆக முடியாமலும், நாம் ஒரு தனித் தொழில் செய்து சுதந்திரமாயிருக்க முடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறு தொழிலில் போய்ச் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம். எவ்வளவுதான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதானாலும் சுயராஜிய அரசியலில் பியூன் போலிஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம்.

    ஸ்தல சுயாட்சிகளில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக்காகலாம். இதுவும் அந்தந்த இலாகா "தேசியத் தலைவர்கள்' தயவு வைத்து கொடுத்தõல்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக்காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்குச் சமமாக அனேகம் பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப் போலவே எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது எட்டுக் கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக்குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள்; மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில் உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக்கின்றார்கள்.

    ஆனால், ஏழு கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்) தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம். உத்தியோகஸ்தர்களாக இருக்கின்றோம். பணக்காரர்களாய், மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1,000க்கு ஒருவர் உண்டா? பணக்காரர் 10,000க்கு ஒருவர் உண்டா? பதவி உள்ளவர்கள் 1,00,000க்கு ஒருவர் உண்டா? இதன் காரணமென்ன?

    நாம் தானே இந்நாட்டின் பழம்பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்நாடகர் என்கின்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த "ஆதி' பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப்பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

    ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும், பூரண சுயேச்சை இருந்தாலும், சுயராஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டுவிட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிறார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் – அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல், அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நிற்க.

    சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமல் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச் சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா, ஜப்பான்காரர்களிலாவது – தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகுகாலமாகவே அதற்கு இணங்கி, நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

    அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார் நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள் என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால், நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல், வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து – எல்லோரும் இந்துக்கள் என்றும், இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை.

    பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும், சுயமரியாதையே பிரதானமானதாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே "புத்தி கற்பித்து' விடுவார்கள்.

    ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் "இந்து' என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய, வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை "இந்து' என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ, அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ, ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

    இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு நாம் "சண்டாளப் பறையராய்' தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் – நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு, “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது'' என்று சொன்னால், அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

    ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று, “என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது; என்னை எட்டிப் போ என்று யாரும் சொல்லக் கூடாது'' என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது'' என்று இண்டியன் பீனல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்டப் புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு விட்டதனாலேயே, அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை, மக்களிடம் இருந்தும் மாற்றிவிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

    இது போலவே நான், இந்துக்களில் மற்றொரு சாரார், தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரரென்றால் ஆத்திரம் கொண்டடி'' என்றும் சொல்லுகிறார்கள்; எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் "சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது, பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கு உரித்தானது என்பதும் இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் – அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.

    அன்றியும் இந்த முறையானது, இந்து மத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும் மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், ராமாயணம் முதலிய இதிகாசப் புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் "பகவான் வாக்கு'களிலும், "ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற "இந்து' என்பவன் யோக்கியனாகவோ அல்லது அறிவுடையவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

    ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் – பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் – தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்து மதம் உள்ள வரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், ராமாயணமும், பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் – சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது.

    திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும், "சாமி' வேதாசலம் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி' சகஜானந்தம் எவ்வளவுதான் சுவாமியானாலும் – எது வரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர்களென்றோ சொல்லிக் கொள்ளுகின்றார்களோ – அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாமவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவு கவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும். அவர்களே அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரச்சாரமும், சைவப் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்கள் – சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

    சம்பந்தனை ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய "சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும், சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக் கொண்ட சைவன் ஒருவன், தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நந்தனை ஒப்புக் கொண்ட ஒருவன், அதுவும் நந்தன் பறையன், அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன், தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம்; “தமிழ் நாட்டில் ஆதியில் ஜாதியில்லை'' என்று சொல்லலாம். சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால், தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி – தன்னைச் சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் ("சற்சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது).

    திரு. காந்தியால் வரும்படியான சுயராஜ்யம் அது எப்படிப்பட்டதானாலும், எவ்வளவு பயனுள்ளதானாலும், பயனற்றதானாலும் – இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப்பட வேண்டியதில்லை. அதுவும் எப்படிப்பட்ட இந்து மதமென்றால், வர்ணாசிரம தர்மத்தோடு கூடின பரம்பரை ஜாதித் தொழிலையும் வகுப்புப் பழக்க வழக்கங்களையும் நடத்திக் கொடுக்க முயற்சிக்கும்படி கட்டாயப்படுத்தும்படியான, இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டியதில்லை.

    ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வரவேண்டும். அந்தக் காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றைய தினம் சுயராஜ்யமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கேட்கும் உரிமையுமிக்க ஒரு நாளும் அனுபவிக்க முடியாது என்பதை கெட்டியாய் மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், ஜாதி சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பேசுவோர்கள் எல்லாம் சட்டப்படி 124ஏ, 153ஏ என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும், துவேஷச் சட்டங்களின் கீழும் குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள்.

    அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்'' என்பதும், வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில், இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில், எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த மதத்தில் அந்த ஜாதியில்தான் சாகின்ற வரையில் இருந்தாக வேண்டும். அதனால்தான் திரு. காந்தியும், “நான் கோரும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்குப் பிரச்சாரமாகிய ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார்களையெல்லாம் இந்தியாவை விட்டு விரட்டி விடுவேன்'' என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்னதானது, வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்து விடக் கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவானதென்றும், பாபமானதென்றும், அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷமானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

    திரு. காந்தியவர்கள் கிறிஸ்துவர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம், மகமதியர்களிடத்தில் இருக்கும் "முரட்டுத்தனத்தின்' காரணமாக பயமேயொழிய, மற்றபடி முகமதியர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால், காந்திய சுயராஜ்யமென்பது, இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும், பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

    திரு. காந்தியவர்கள் பல தடவை சொல்லியிருக்கும் சமத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கேயொழிய சரீரத்திற்கல்ல'' என்று சொல்லியிருக்கின்றார். மற்றும் அவர் 191929 இல் “தீண்டாமையொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்யம் நிலைக்காது'' என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் ரணகளமாகும்படியான கலகம் ஏற்படும்'' என்றும் சொல்லியிருக்கின்றார்.

    இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், “தீண்டாமை ஒழிய வேண்டியதும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்'' என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். இதன் அருத்தமென்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால், பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால், பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து ராணுவச் சட்டத்தினால் முஸ்லிம்களையும், தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பாருங்கள்.

    ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே! தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; இரண்டு முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!

    (நன்றி : தலித் முரசு பிப்ரவரி 2009)

    more

புதிய இடுகைகள்

Photos

வீடியோக்கள்

Archieve